அடேங்கப்பா! சூப்பர் ஸ்டாரின் "ஜெயிலர்" படத்தின் சாதனையை முறியடித்த ''லியோ''... உற்சாகத்தில் ரசிகர்கள்..!!!

 தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ''லியோ'' படத்தில் நடித்துள்ளார்.



 

இதனையடுத்து, இந்த படத்தின் டிரைலர் நேற்று மாலை ரிலீசானது. ட்ரெய்லர் ரிலீசான சில மணி நேரங்களிலேயே பட்டிதொட்டி எங்கும் ஹிட்டாகி வைரலாகி வருகிறது. மேலும், இந்த ட்ரெய்லர் பல சாதனைகளையும் படைத்து வருகிறது. அதன்படி, இந்த ட்ரெய்லர் ரிலீசாகி ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் டிரைலர் சாதனையை முறியடித்துள்ளது. 



ஜெயிலர்  படத்தின் டிரைலர் தற்போது வரை 3 கோடி பார்வைகள் மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் லியோ படத்தின் டிரைலர் ரரிலீசான 24 மணி நேரத்துக்கு முன்பே இந்த 3 கோடி பார்வையை கடந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

போடு செம! ''அயலான்'' படத்தின் அசத்தலான டீசர் ரிலீஸ்... இணையத்தில் செம வைரல்..!!!

இதுவரை ''மார்க் ஆண்டனி'' திரைப்படம் செய்த மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா...?